அமாவாசை தர்ப்பணம்

1 month_ago 12

திருத்தணி: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த பிரபலமான கோயிலாகும். வைத்திய வீரராகவர் கோயிலில் அம்மாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். இந்நிலையில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  வீரராகவ கோயிலுக்கு வந்தனர். இதனையடுத்து, நேற்று அதிகாலை காக்களூர் ஏரி பகுதியில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோயில் நுழைவு வாயில் பகுதியில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

Read Entire Article