இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுப்பதா? வங்கி மேலாளரை இந்தி பேசும் மாநிலத்திற்கு விரட்டியடிக்க வேண்டும் என ராமதாஸ் கண்டனம்

4 week_ago 4

சென்னை:இந்தி தெரியாது என்பதற்காக கடன் வழங்க மறுத்த பொதுத்துறை வங்கி மேலாளருக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரின் டுவிட்டர் பதிவு:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதற்காக  ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை. தமிழ்நாட்டில் வங்கியில் பணியாற்றிக் கொண்டு இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராகக் கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்றத் தகுதியற்றவர். உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்.மத்திய அரசுத்துறை அலுவலகங் களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article