ஐபிஎல்2020 டி20; ராஜஸ்தான் அணிக்கு எதிரான 4-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

4 week_ago 5

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான 4-வது போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 3முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று களம் காண உள்ளன. இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் 14 ஆட்டங்களில் சென்னையும், 7 ஆட்டங்களில் ராஜஸ்தானும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் சென்னையும், ஒன்றில் ராஜஸ்தானும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article