ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று : உலகளவில் கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதல் இடம்!!

3 week_ago 4

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 17 லட்சத்து 63 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 74 லட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 21 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 74 ஆயிரத்து 545 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 815 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-இந்தியா - 44,97,868அமெரிக்கா - 43,43,754பிரேசில் - 39,45,627ரஷியா - 9,17,949கொலம்பியா - 6,50,801பெரு - 6,22,418தென் ஆப்ரிக்கா - 5,92,904கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-அமெரிக்கா - 2,05,447பிரேசில் - 1,38,159இந்தியா - 88,935மெக்சிகோ - 73,697இங்கிலாந்து - 41,825இத்தாலி - 35,738பெரு - 31,474பிரான்ஸ் - 31,416ஸ்பெயின் - 30,904ஈரான் - 24,656கொலம்பியா - 24,570கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா - 70,97,376இந்தியா - 55,62,664பிரேசில் - 45,95,335ரஷியா - 11,15,810கொலம்பியா - 7,77,537பெரு - 7,72,896மெக்சிகோ - 7,00,580ஸ்பெயின் - 6,82,267தென் ஆப்பிரிக்கா - 6,63,282அர்ஜெண்டினா - 6,52,174

Read Entire Article