கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்பு

1 month_ago 3

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். திருவில்லிபுத்தூர் அருகே கண்ணன் காலனியில் வசிப்பவர்களில் ஏராளமானோர் ஆடு, மாடு வளர்த்து வருகின்றனர். இன்று அதிகாலை 5 மணியளவில் பசு மாடு ஒன்று 5 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் தவித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி பசுமாட்டை மீட்டனர்.

Read Entire Article