கோடநாடு விவகாரம் முதல்வர் வழக்கை எதிர்த்த மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

1 month_ago 3

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில், ராதாகிருஷ்ணன் ஆகிய 7 பேருக்கு எதிராக, ரூ.1 கோடியே 10 லட்சம் மான நஷ்டஈடு கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் பற்றி பேசவும், எழுதவும் தடை விதித்ததோடு, மனுவுக்கு பதிலளிக்க, மேத்யூ சாமுவேல் உள்பட 7 பேருக்கும்  உத்தரவிட்டது.இந்நிலையில் முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, முதல்வர் தாக்கல் செய்த மான நஷ்ட ஈடு வழக்கை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மேத்யூ சாமுவேலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், முதல்வரின் மனுவுக்கு பதிலளிக்குமாறு மேத்யூ சாமுவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Read Entire Article