சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு மத்திய அரசின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

1 month_ago 3

புதுடெல்லி: சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இத்திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அது தொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது. வழக்கை செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அருண்மிஸ்ரா முதலாவதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில வளர்ச்சி தொடர்பான திட்டம் என்பதால் விரைந்து விசாரிக்க வேண்டும். தள்ளிவைக்கக் கூடாது என்றார். அப்போது குறுக் கிட்ட நீதிபதி அருண்மிஸ்ரா, இங்கு அனைத்து வழக்குகளுமே முக்கியம் வாய்ந்ததுதான் எனக்கூறி மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கு செப். 3ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Read Entire Article