டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளில் சென்னையில் ரூ.33.5 கோடிக்கு மதுவிற்பனை

1 month_ago 3

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் ரூ.33.5  கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 7ம் தேதி பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அப்போது, சென்னையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டது. இந்தநிலையில், சென்னை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, சென்னையில் 720 டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. 3 மீட்டர் இடைவெளியில் வட்டங்களில் நின்றே மதுவாங்க குடிமகன்கள் அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி, முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுவழங்கப்பட்டது. சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு கடைகள் திறக்கப்படுவதால் ₹60 கோடி வரையில் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் இல்லாததால் விற்பனை நடைபெறவில்லை. சாதாரண நாட்களில் ரூ.30 கோடி வரையில் விற்பனை நடைபெறும்.  ஆனால், நேற்று ரூ.33.5 கோடிக்கு மட்டுமே மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை விற்பனை இருமடங்காகும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article