தமிழகத்தில் குறையும் தொற்று பாதிப்பு; இன்று மேலும் 4,295 பேருக்கு கொரோனா; பலி எண்ணிக்கை 10,586 ஆக உயர்வு; சுகாதாரத்துறை தகவல்..!!

1 week_ago 5

சென்னை: தமிழகத்தில் மேலும் 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,83,486 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 4,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 6,83,486 -ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,32,708 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,005 பேர் குணமடைந்துள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்துள்ளது.* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,132 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,88,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 86,07,812 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 90,242 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 192 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 40,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,12,802 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,594 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,70,652 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும்  1,701 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு  திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.* வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Read Entire Article