தமிழக கடலோர மாவட்டங்களில் மழை

1 month_ago 2

சென்னை: தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. தற்போது, வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அதனால் வடமேற்கு பகுதியில் மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் நேற்று ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்குவங்கம் ஒடிசா பகுதியில் நிலை கொண்டு இருக்கிறது. இதனால் ஒடிசா பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தவிர மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில்லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Read Entire Article