தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு கொரோனா காலத்தில் தேர்தல் 3 நாளில் புதிய விதிமுறைகள்

1 month_ago 4

புதுடெல்லி: கொரோனா தொற்று காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல் விதிமுறைகள் 3 நாட்களில் உருவாக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலினால் கடந்த மார்ச் முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட இருந்த இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான புதிய அட்டவணையும் இதுவரை வெளியாகவில்லை.இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் சட்டப்பேரவை காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இங்கு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில், தேர்தலை எப்படி நடத்துவது என்பதற்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளை உருவாக்குவதற்காக அரசியல் கட்சிகளின் கருத்துகளை தெரிவிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம், கடந்த மாதம் கேட்டு கொண்டது. அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம், இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த அறிக்கையிலும், பாஜ டிஜிட்டல் பிரசார திட்டத்தை முன் வைத்த போது, 9 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அதனை எதிர்த்தன. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``கட்சிகள் சமர்பித்துள்ள ஆலோசனைகள், கருத்துகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும். அதன் பிறகு, கொரோனா தொற்று கால கட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கான புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் மூன்று நாட்களில் தயாரிக்கப்பட உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.* தேர்தல் ஆணையர் லவாசா ராஜினாமாதலைமைத் தேர்தல் ஆணையர் தவிர, தேர்தல் ஆணையத்தில் உள்ள இரண்டு தேர்தல் ஆணையாளர்களில் ஒருவரான அசோக் லவாசா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ஆகஸ்ட் 31ம் தேதியன்று தன்னை விடுவிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். மூப்பு அடிப்படையில், இவர் அடுத்த தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article