விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 செலுத்தப்படும் :மத்தியப் பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பு!!

4 week_ago 8

போபால் : விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.4,000 செலுத்தப்படும் என்று மத்தியப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. ஒரு புறம் நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வரும் பட்சத்தில் மறுபுறம் கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் விவசாயிகளின் நிலைமையும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை மத்தியப்பிரதேச மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீரோ வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.800 கோடி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.4,000 பணம் செலுத்தப்படும் என்று மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.இது பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி(PM-KISAN) திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுகான்,'பிரதமரின் சம்மன் நிதியின் கீழ் பதிவு செய்துள்ள தகுதி வாய்ந்த விவசாய குடும்பங்களுக்கு ரூ.4,000 பணம் வழங்கப்படும். இது நடப்பு நிதியாண்டில் இரண்டு தவணைகளில் கிடைக்க வழிவகை செய்யப்படும். விவசாயிகளின் நலன் தான் என்னுடைய வாழ்வின் இலக்கு. வரும் 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். உணவு தானியங்கள் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article